தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: சிவசேனாவின் தேசப்பற்று பாகிஸ்தானால் உறுதியாகிறது- சாம்னா தலையங்கத்தில் பெருமிதம்

தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: சிவசேனாவின் தேசப்பற்று பாகிஸ்தானால் உறுதியாகிறது- சாம்னா தலையங்கத்தில் பெருமிதம்
Updated on
1 min read

சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான சாம்னாவின் தலை யங்கத்தில் கூறியிருப்பதாவது:

சிவசேனா கட்சி தேசப் பற்றுடன் செயல்பட்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்துள் ளது. இதன் உச்சமாக சிவ சேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ் தான் மக்கள் கட்சி கோரிக்கை வைக் கிறது. மேலும் ‘சிவசேனாவின் செயல்பாட்டை கவனிக்க வேண் டும்’ என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

சிவசேனா கட்சி தொடர்பாக பாகிஸ்தானில் என்ன நிகழ்ந்தாலும் அது எங்களுக்கு பெருமை தருவ தாக உள்ளது. எங்களுக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் நிலைப்பாடு, எங்களுடைய தேசப்பற்றுக்கு அங்கீகார முத்திரையை வழங்கி உள்ளது. பாகிஸ்தான் எங்களை எதிரியாக பாவிப்பதை நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம்.

பாகிஸ்தான் கஸல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி, அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரியின் நூல் வெளியீட்டு விழா, அந்நாட்டு கிரிக்கெட் அணி யுடனான விளையாட்டு ஆகியவற் றுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக வருத்தப்படவில்லை.

இந்த விஷயத்தில் எங்களுடைய செயல்பாட்டை எதிர்த்தவர்கள்கூட (பாஜக), பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு காரணமாக மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in