இரு பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூட முடிவு; 3 நிறுவனப் பங்குகளை விற்க திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா : கோப்புப்படம்
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா : கோப்புப்படம்
Updated on
1 min read

இரு அரசு பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடவும், 3 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்தார்.

மக்களவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மத்திய ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மருந்துத்துறை 5 பொதுத்துறை மருந்து நிறுவனங்களை நிர்வகிக்கிறது. 5 பொதுத்துறை நிறுவனங்களில் 2 மருந்து நிறுவனங்களை மூடத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிட், ராஜஸ்தான் ட்ர்கஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய இரு அரசு நிறுவனங்களை மூட முடிவு எடுத்துள்ளோம்.

மேலும், இந்துஸ்தான் ஆன்ட்டிபயோடிக்ஸ் லிமிட், பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ், கர்நாடகா ஆன்ட்டிபயோடிக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை அரசு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிட், ராஜஸ்தான் ட்ர்கஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய இரு அரசு நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் விஆர்எஸ் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது

கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சர்கள் குழு கூடி இந்த நிறுவனங்களை மூடுவது குறித்தும், பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது''.

இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in