Last Updated : 10 Feb, 2021 03:14 AM

 

Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 3 முறை தமிழகம் வர பிரதமர் நரேந்திர மோடி திட்டம்

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 3 முறை தமிழகம் வரத் திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி.

தமிழக சட்டப்பேரவை தேர் தலில் பாஜக முதன்முறையாக அதிக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக தலைமையிலான கூட்ட ணியில் போட்டியிட்டாலும் அக்கட்சி தனிப்பட்ட செல்வாக்கையும் தமிழகத்தில் வளர்க்க முயல்கிறது. இதற்காக அம்மாநில நிர்வாகிகளுடன் தேசிய தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்த தேர்தலில் சிறை தண்டனை முடித்து விடுதலையாகி உள்ள சசிகலாவின் வருகையும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாகி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடிதமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது வருகை நேரடியாக தேர்தலில் இல்லாமல் முன்னதாகவே வருவது பிரதமர் மோடியின் செல்வாக்கை தமிழர்கள் இடையே அதிகரிக்கும் எனபாஜக கருதுகிறது. சில வருடங்களாகவே பிரதமர் திருக்குறள், பாரதியார் கவிதை போன்றவற்றை தன் உரைகளில் குறிப்பிட்டும் பேசியும் வருகிறார். இச்சூழலில், தேர்தலுக்கு முன்பாக வரும் பிப்ரவரி 14-ல் பிரதமர் மோடி சென்னை வரும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த ஒருமுறை மட்டும் அல்லாமல் தேர்தலுக்கு முன்பாகவே 3 முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார்.

15 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘மேற்குவங்க மாநிலத்தை போல் தமிழகத்திற்கும் வருகை தர பிரதமர் மோடி அதிக ஆர்வமாக உள்ளார். இவருக்காக மத்திய அரசின் சுமார் 15 நிகழ்ச்சிகள் பல நாட்களாக திட்டமிடப்பட்டு வருகின்றன. ஒரே நிகழ்ச்சியில் இவை அனைத்தும் நடத்தப்பட இருந்தது. பிறகு, இவற்றை பிரதமரின் அறிவுறுத்தலின்படி மாற்றி, தலா ஐந்து நிகழ்ச்சிகளை ஒன்றாக தொகுத்து மூன்று விழாவாக நடைபெறுகிறது.

இதன்மூலம், அவர் ஒரே முறையாக இல்லாமல் மூன்று முறை தமிழகம் வர உள்ளார். இதன் முதல் நிகழ்ச்சி பிப்ரவரி 14-ம் தேதி சென்னையில் நடை பெறுவது உறுதியாகி விட்டது. மற்ற இரண்டில் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்கள் பரிசீலனையில் உள்ளன’’ எனத் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிரதமரின் இந்தமூன்று நிகழ்ச்சிகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்ள இருக்கிறார். இதில் சிலமத்திய அமைச்சர்களும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.இவை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாபெரும் கூட்டங்களாக நடைபெறுவதில் பிரதமர் உரையாற்றுவார். இதில் காணொலிக் காட்சிகளாக மத்திய அரசின் நிகழ்ச்சிகள் துவக்கி வைக்கப்பட உள்ளன. இதற்கான திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் முதல் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மீதான ஆலோசனையை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் தமிழகத்தில் நடத்துவார் கள். இதில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து பிரதமரின் அனைத்து நிகழ்ச்சிகளும் அமைய உள்ளன.

பிரதமரின் முதல் நிகழ்ச்சி சென்னை பெரியமேட்டிலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறக்கூடும் எனத் தெரிகிறது. இதில், ஆவடி பீரங்கித் தொழிற்சாலையில் உள்ள டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன்ஸ்(டிஆர்டிஓ) ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அர்ஜுன் மாக்-2 எனும் புதிய வகைபீரங்கி அறிமுகம், வண்ணாரப்பேடை முதல் விம்கோநகர் வரையிலான மெட்ரோ ரயில் துவக்கம், சென்னை ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட ஐந்து நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரி கிறது. மேலும் சென்னை பீச் - அத்திப்பட்டு நான்காவது ரயில்பாதை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகியவற்றின் ரயில் பாதைகள் மின்சாரமயமாக்கல் ஆகிவற்றை தேசத்திற்கு அர்ப் பணிக்கிறார்.

பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவது உறுதியாகிவிட்டது. மற்ற இரண்டில் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்கள் பரிசீலனையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x