

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் கிரிக்கெட் தொடர்களை பருந்துப் பார்வையில் நேரடியாக படம் பிடிக்கும் வகையில் ’ட்ரோன்களை’ பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அளித்துள்ளது.
போட்டிகளை ட்ரோன்கள் மூலம் பருந்துப் பார்வையில் நேரடியாக படம் பிடிக்க, அனுமதிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் குடிச் நிறுவனம் விடுத்த வேண்டுகோளை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் பெற்றது.
இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சக இணை செயலாளர் ஆம்பர் துபே கூறுகையில், ‘‘ ட்ரோன் விதிமுறைகள் 2021, சட்ட அமைச்சகத்தின் இறுதிகட்ட ஆலோசனையில் உள்ளது. இதற்கு 2021 மார்ச் மாதத்துக்குள் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.
இந்த நிபந்தனையுடன் கூடிய விலக்கு, ஒப்புதல் கடிதம் வழங்கிய தேதியிலிருந்து 2021 டிசம்பர் 31 வரை அல்லது வான்வழி தளத்தை பயன்படுத்தும் வரை இதில் எது முன்போ அதுவரை செல்லுபடியாகும். அனைத்து நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக பின்பற்றினால் மட்டுமே, இந்த விலக்கு செல்லுபடியாகும். விதிமுறைகள் மீறப்பட்டால், இந்த விலக்கு செல்லாததாகிவிடும்.