Last Updated : 26 Nov, 2015 01:36 PM

 

Published : 26 Nov 2015 01:36 PM
Last Updated : 26 Nov 2015 01:36 PM

அவமானங்களை சந்தித்தபோதும் அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேற நினைத்ததில்லை: ராஜ்நாத்

இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தின் 2 நாள் சிறப்பு அமர்வு நேற்று தொடங்கியது.

இதில் அரசியலமைப்பு சட் டத்தில் நமது உறுதிப்பாடு தொடர் பான விவாதத்தை ராஜ்நாத் தொடங்கி வைத்து பேசும்போது, “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கட்டிக்காப்பதில் நமக் குள்ள பொறுப்புகளை இன்று விவாதிக்கிறோம். அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளில் ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்தில் இதனை விவாதிப்பது மிகப் பெரும் சாதனையாகும். மிகப் பெரும் தலைவர்கள் பலரின் பங்க ளிப்பால் நமது அரசியல் சாசனம் உருவாகியுள்ளது. இதில் அம்பேத்கரின் பங்கு முக்கிய மானது. இந்தியா ஒரே தேசமாக உரு வாகும் என்பதில் பலருக்கு அப்போது நம்பிக்கையில்லை. சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்த சர்தார் படேலின் பங்கு இதில் முக்கியமானது. அம்பேத்கர் பல்வேறு விமர்ச னங்களை எதிர்கொண்ட போதும், ஒருங்கிணைந்த இந்தியா என்ற தனது குறிக்கோளில் உறுதி கொண்டிருந்தார். அம்பேத்கர் பல்வேறு அவமானங்களை சந்தித்த போதும், இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர் தனது உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு தனது குறிக் கோளில் உறுதியாக இருந்தார். இக்கட்டான சூழலிலும் கூட நான் இந்தியாவிலேயே இருப் பேன். இந்திய கலாச்சாரம், மதிப்பீடுகளை மனதில் கொண்டு நாட்டை பலப்படுத்துவேன் என்று உறுதிபட தெரிவித்தார்" என்றார்.

நடிகர் ஆமீர்கான், தனது மனைவி இந்தியாவில் வசிப்பதை பாதுகாப்பற்றதாக உணர்வதாக வும் குழந்தையுடன் நாட்டை விட்டு சென்று விடலாமா என்று அவர் கேட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு கூறினார்.

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஆமிர் கான் பின்னர் தெளிவு படுத் தினாலும், அவரது கருத்தை ஒட்டியே ராஜ்நாத் இவ்வாறு பேசி யதாக கருதப்படுகிறது.

ராஜ்நாத் சிங் கருத்துக்கு இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரி வித்தனர். மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, “அவர் (ஆமிர்கான்) நாட்டை விட்டு வெளியேறப்போவ தாக கூறவில்லை.

ஆரியர்களான நீங்கள் வெளி யில் இங்கு வந்துள்ளீர்கள். நாங்கள் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். இங்கு தாக்குதல்களால் பாதிக் கப்பட்டு வருகிறோம். நாங்கள் இங்குதான் இருப்போம்” என்றார். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில் சகிப்பின்மை குறித்த ஆமீர் கானின் பேச்சு நாட்டை பிளவுப்படுத்துவதாக அமைந்துள்ளது என குற்றம்சாட்டி அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனோஜ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். வரும் டிசம்பர் 1-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x