Last Updated : 08 Feb, 2021 12:22 PM

 

Published : 08 Feb 2021 12:22 PM
Last Updated : 08 Feb 2021 12:22 PM

கரோனாவை கையாள ஊரடங்கு மூலம் நாட்டை தயார் செய்தவர் பிரதமர் மோடி: அமித் ஷா பாராட்டு

அமித் ஷா | கோப்புப் படம்.

கன்காவ்லி (மகாராஷ்டிரா)

கரோனாவை கையாள ஊரடங்கு மூலம் நாட்டையே தயார் செய்தவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில்கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த ஆறரை ஆண்டுகளில் நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மோடி அரசு செயல்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் நாட்டில் 55 லட்சம் பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உலகின் கரோனா வைரஸ் தடுப்பூசி தேவைகளில் 70 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்ய உள்ளது. இரண்டு தடுப்பூசிகள் 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.நாட்டில் தற்போது மேலும் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த்தொற்றுக்காக இந்தியாவின் சிகிச்சையை உலகில் 170 நாடுகள் பின்பற்றி வருகின்றன. கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் பெரிய வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவில், மத்திய அரசு, மாநில அரசுகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் 130 கோடி மக்களும் ஒன்றாக இணைந்து நிலைமையை சிறப்பாக கையாண்டனர், அதுபோல மற்ற நாடுகளில் கையாளப்படவில்லை.

நம் நாட்டில் கோவிட் 19 இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அதே நேரம் குணமடைந்தோர் விகிதம் உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி நிலைமையைக் கையாள அதற்காக நாட்டையே தயார் செய்தார்.

ஜனதா ஊரடங்கு உத்தரவு மூலம், அவர் லாக்டவுனுக்கு மக்களை தயார்படுத்தினார். நோய்த் தொற்றுகளின் போது, சுகாதார உள்கட்டமைப்பு ஒரு ராக்கெட் வேகத்தில் மேம்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு தடுப்பூசிகள் உள்ளன."

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x