Published : 24 Mar 2014 09:40 AM
Last Updated : 24 Mar 2014 09:40 AM

பாஜகவில் இணைந்த சில மணி நேரத்தில் ராமசேனைத் தலைவர் முத்தாலிக் நீக்கம்

மங்களூர் கேளிக்கை விடுதியில் பெண்களைத் தாக்கி பரபரப்பை ஏற்படுத்திய ராமசேனை இயக்கத் தலைவர் பிரமோத் முத்தாலிக் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாஜக தலை வர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஆகியோர் முன்னிலையில் முத்தாலிக் கட்சியில் சேர்ந்தார்.

அப்போது முத்தாலிக் நிருபர் களிடம் கூறியபோது, நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க வேண்டும் என்பதற் காக பாஜகவின் கரத்தை வலுப் படுத்த அந்தக் கட்சியில் இணைந் துள்ளேன் என்று தெரிவித்தார். 2009-ம் ஆண்டில் மங்களூரில் உள்ள கேளிக்கை விடுதியில் ராம சேனைத் தலைவர் முத்தாலிக்கும் அவரது ஆதர வாளர்களும் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கினர். இது குறித்து அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியபோது, ராமசேனைக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்தார்.

இப்போது முத்தாலிக் பாஜக வில் இணைந்திருப்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

காங்கிரஸ் கருத்து

“பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பெண்களின் முன்னேற் றம், சுதந்திரம் குறித்துப் பேசி வருகிறார். ஆனால் பிற்போக்கு வாதியான முத்தாலிக்கை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. இது பாஜகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

இந்நிலையில் கட்சியில் சேர்ந்த சில மணி நேரங்களில் பிரமோத் முத்தாலிக் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

முத்தாலிக்கை கட்சியில் சேர்த்தது குறித்து டெல்லி தலைமை யிடம் மாநில பாஜக ஆலோசனை நடத்தவில்லை. முத்தாலிக்கின் அடிப்படை உறுப்பினர் பதவியை நிராகரிக்கும்படி மாநில பாஜகவுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி விடுத்த அறிக்கையில், பல்வேறு காரணங்களால் முத்தாலிக்கின் உறுப்பினர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x