Last Updated : 07 Feb, 2021 07:44 AM

 

Published : 07 Feb 2021 07:44 AM
Last Updated : 07 Feb 2021 07:44 AM

கரோனாவுக்கு எதிராக மேலும் 7 தடுப்பு மருந்துகள் : மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தகவல்


கரோனா வைரஸுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி போடுவதற்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தெரிவித்தார்.

கரோனாவுக்கு எதிராக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்த கோவாக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ரஜென்கா, சீரம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது நாட்டில் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதுவரை அனைத்து மாநிலங்களிலும் 50 லட்சம் சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்களுக்கு தடுப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வகையில் கூடுதலாக மேலும் 7 கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ கரோனா வைரஸுக்கு எதிராக தற்போது 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கோவிஷீல்ட், கோவாக்ஸின் மருந்துகள் முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் 7 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இப்போதுள்ள சூழலில் சந்தையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கரோனா தடுப்பூசிகளை விற்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. அவசரச்சூழலுக்கு ஏற்ப அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் சூழலை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட உருவாகலாம். ஆதலால், எதிர்காலத்ிதல் சூழலுக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் முடிவுகளை அரசு எடுக்கும்.
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும். நாம் இரு தடுப்பூசிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடாது, ஆதலால், மேலும் 7 தடுப்பூசிகளை உள்நாட்டில் உருவாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தியா மிகப்பெரிய நாடு, மக்கள் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொருக்கும் கிடைக்கும் வகையில் அதிகமான தடுப்பூசிகளை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த 7 தடுப்பூசிகளில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் இருக்கின்றன. 2 தடுப்பூசிகள் கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தையக் கட்டத்திலும், ஒரு தடுப்பூசி முதல் கட்ட களினிக்கல் பரிசோதனையிலும், 2-வது தடுப்பூசி 2-வது கட்டத்திலும் உள்ளன.
இவ்வாறு ஹர்ஸவர்த்தன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x