

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் என்பதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேவேளையில், கூன் விழுந்த இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்த சில கசப்பான மருந்துகளை உட்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகச் சுட்டிக்காட்டியிருப்பதால், மத்திய பட்ஜெட்டில் கடுமையான சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சூழலில், மோடி அரசின் முதல் பட்ஜெட் மீதான உங்களது எதிர்பார்ப்புகள் எப்படிப்பட்டது?
கருத்துப் பகுதியில் விவாதிக்கலாம் வாருங்கள்.