

குஜராத்தில் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லில் சேர்க்க வலியுறுத்தி போராடி வருகிறார் ஹர்திக் படேல். கடந்த மாதம் 18ம் தேதி இவர் நடத்திய போராட்டத்தின் போது லேசான அளவில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, ஹர்திக் படேல் மீது தேச துரோகம், வதந்தி பரப்பியது, குற்றம் செய்ய துாண்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின், குஜராத் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்துச் செய்யக் கோரி, ஹர்திக் படேல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் கோபால கவுடா மற்றும் அமிதவா ராய் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹர்திக் படேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதாடினார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் இருவரும், இந்த வாதம் தொடர் பாக பரஸ்பரம் கலந்தாலோசித்து, வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டனர். அதே சமயம், ஹர்திக் படேல் நிவாரணம் பெற வசதியாக, இவ்வழக்கு விசார ணையை, வேறு அமர்வுக்கு மாற்று வதாக அறிவித்தனர்.