Published : 06 Feb 2021 04:42 PM
Last Updated : 06 Feb 2021 04:42 PM

புதிய உச்சம்; கரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது

புதுடெல்லி

ஒட்டுமொத்தமாக நாடுமுழுவதும் இதுவரை கரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது.

ஐசிஎம்ஆர் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

சரியான நேரத்தில், பரிசோதனையின் அளவை தீவிரப்படுத்தியதால், பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது. கடந்த ஜூலை 6-ம் தேதி பரிசோதனை அளவு ஒரு கோடியை எட்டிய நிலையில், ஆகஸ்ட் மாத்தில் 2 கோடியை எட்டியது. அடுத்த 15 நாட்களில் அடுத்த ஒருகோடியை பரிசோதனை அளவு எட்டியது.

கரோனா பரிசோதனை அளவு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் புதிய உச்சமாக ஒட்டுமொத்தமாக நாடுமுழுவதும் இதுவரை கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 7,40,794 கரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. இதுமட்டுமின்றி கரோன பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது இது 5.39 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியபோது தேசிய வைரலாஜி நிறுவனத்தில் மட்டும் ஒரு கரோனா ஆய்வகம் மட்டுமே இருந்தது. அதன்பின் லாக் டவுன் காலத்தில் 100 ஆய்கவகங்களாக அதிகரி்க்கப்பட்டன. கடந்த ஜூன் 23-ம் தேதி நிலவரப்படி ஆயிரம் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஆய்வகங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டன.

தற்போது ஒட்டுமொத்தமாக 2,369 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் நாட்டில் செயல்பட்டுட வருகின்றன. இதில் அரசு சார்பில் 1,214 ஆய்வகங்களும், தனியார் துறை சார்பில் 1,155 ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,713 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,08,14,304 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை ஒரு கோடியே 1,05,10,796 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 14,488 குணமடைந்துள்னர்.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,48,590 ஆகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 95 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,54,918 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x