பட்ஜெட் தாக்கலான உடனே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதா? - ராகுல் கேள்வி

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

பட்ஜெட் தாக்கலான உடனே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் செய்வதா என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் அரசு சார்பான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) வியாழக்கிழமை மெட்ரோ நகரங்களில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.25 ஆக உயர்த்தியுள்ளன.

அதன்படி சென்னையில் மானியமில்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும், மும்பையில் ரூ.719 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி இன்றைய தனது ட்விட்டர்பதிவில் கூறியுள்ளதாவது:

''பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் வரவுசெலவு திட்ட அறிக்கைகள் வெளியிட்ட சில தினங்களிலேயே சிலிண்டர் விலையை உயர்த்துவதா, இதன்மூலம் மோடி அரசு நாட்டின் மற்றும் வீடுகளின் வரவு செலவுத் திட்டத்தை சீர்குலைத்துவிட்டது''

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in