

மக்களை ஒரு முறை மட்டுமே முட்டாளாக்க முடியும் என்பதை பிஹார் தேர்தல் முடிவு நிரூபித் துள்ளது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட் டணியில் சிவசேனா இடம்பெற் றுள்ளது. என்றாலும் பாஜகவின் செயல்பாடுகளை அக்கட்சி விமர்சித்து வருகிறது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலை யில், சிவசேனாவின் அதிகாரப் பூர்வ இதழான ‘சாம்னா’வில் நேற்று வெளியான தலையங் கத்தில் கூறியிருப்பதாவது:
பிஹாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரின் மகத்தான வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
இதில் முக்கிய காரணம், நிதிஷ்குமார் நேர்மையானவர் என்ற நற்பெயர் மற்றும் அவரது நேர்மையான பிரச்சாரம்.
டெல்லி தேர்தல் முடிவுகளை இலகுவாக எடுத்துக் கொண்டவர்கள், பிஹார் தேர்தல் முடிவுகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இத்தேர்தல் பிரதமர் நரேந்திர மோடி- முதல்வர் நிதிஷ்குமார் இடையே நேரடி மோதலாக இருந்தது.
அரசியல் பலம், பண பலம் மற்றும் பல்வேறு சலுகை அறிவிப்புகளுக்குப் பிறகும் பாஜகவால் 60 இடங் களை கூட பெற முடியவில்லை. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளோ 20 அடி ஆழத்தில் புதையுண்டுவிட்டன.
நிதிஷ்குமார் பொய் பிரச்சாரம் செய்யவில்லை என்பதும் அவர் மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார் என்பதும் மெகா கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களின் ஒன்றாகும்.
பொய் வாக்குறுதிகளை நிதிஷ் அளிக்கவில்லை. அவர் பிஹாரில் குண்டர்களை அடக்கி ஒடுக்கினார். சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தார். அவர் தேர்தலில் பண பலம், அதிகார பலத்தை பிரயோகிக்க வில்லை. எளிய தலைவராக அவர் பிரச்சாரம் செய்தார். நாகரிகமற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை. இதெல்லாம் அவரை வெற்றிக்கு இட்டுச் சென்றது.
தேர்தலில் அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி ஒருவர் ஒருமுறை மட்டுமே வெல்ல முடியும். மக்களை ஒருமுறை மட்டுமே முட்டா ளாக்க முடியும். நிதிஷ் குமார் வெற்றிக்குப் பிறகு பாகிஸ் தானில் பட்டாசு வெடிக்கப் பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் பிஹாரில் பட்டாசு வெடிக்கப்பட்டது நிச்சயம்.
இவ்வாறு ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப் பட்டுள்ளது.