

வெங்காயம் விலையில் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் பெரிய இடைவெளி இருப்பது குறித்து மாநில அரசுகள் மீது மத்திய அரசு அதிருப்தி கொண்டுள்ளது.
பதுக்கலை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு, குஜராத் தவிர இதில் வேறு மாநிலங்கள் தீவிரம் காட்டாதது பற்றி மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத் மற்றும் தமிழகத்தில் மட்டும் சுமார் 35,000 அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் முதல் பதுக்கலுக்குக் காரணமான 6,223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் வெங்காயம் விலை சில்லறை விற்பனைச் சந்தையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆனால் மொத்த விற்பனை விலையோ கிலோவுக்கு ரூ.18. இந்த இடைவெளி ஏன் என்று மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து நுகர்வோர் விவகாரத் துறைச் செயலர் கேஷவ் தேசிராஜு கூறுகையில்:
விலை உயர்வுக்குக் காரணமே இல்லை. வெங்காயம் கையிருப்பு நிறையவே உள்ளது. ஆகவே விற்பனையில் எந்த விதப் பிரச்சினையும் இல்லை. ஆனாலும் சில்லறை விற்பனை விலை அதிகரித்துள்ளது.
மாநில அரசுகள் பதுக்கல்களைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். என்று கூறியுள்ளார்