பாஜக தலைவர் பதவியில் இருந்து அமித்ஷாவை நீக்க வேண்டும்: மூத்த தலைவர் சங்பிரியா வலியுறுத்தல்

பாஜக தலைவர் பதவியில் இருந்து அமித்ஷாவை நீக்க வேண்டும்: மூத்த தலைவர் சங்பிரியா வலியுறுத்தல்
Updated on
1 min read

‘‘பிஹார் தேர்தலில் தோல்வி அடைந்ததால், பாஜக தலைவர் பதவியில் இருந்து அமித்ஷாவை நீக்கிவிட்டு, ராஜ்நாத் சிங்கை நியமிக்க வேண்டும்’’ என பாஜக மூத்த தலைவர் சங்பிரியா கவுதம் வலியுறுத்தியுள்ளார்.

பிஹார் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த பின், கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்கொடி உயர்த்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்த குமார், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், மற்றொரு மூத்த தலைவரான சங்பிரியா கவுதமும் (84) அமித்ஷாவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த சங்பிரியா கவுதம் இது குறித்து நேற்று கூறியதாவது:

பிஹார் தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடியும் கட்சி தலைவர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும். தலைவர் பதவியில் இருந்து அமித் ஷாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நியமிக்க வேண்டும்.

குஜராத்தில் நடந்து வரும் இடஒதுக்கீடு போராட்டத்தை முதல்வர் ஆனந்திபென் படேலால் சமாளிக்க முடியவில்லை. எனவே, அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு, அமித்ஷாவை புதிய முதல்வராக்க வேண்டும். அதே போல், நிதின் கட்கரியை துணை பிரதமராக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in