Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்று நாடுதழுவிய மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவ சாயிகள், இன்று நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இப்போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக் கும் மேலாக விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தில் டெல்லியில் விவ சாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் பலரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் டெல்லியில் சிங்கு, காஜிபூர், திக்ரி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில், இன்று நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாலும் விவசாயிகள் போராடும் இடங் களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளதாலும் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

டெல்லியைத் தவிர்த்து தேசிய தலைநகர் பகுதியின் பிற இடங் கள், தென் மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

கடந்த நவம்பர் முதல் விவசாயிகளின் போராட்டத்துக்கு தலைமை வகித்து வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத், கூறியதாவது:

டெல்லியில் நாங்கள் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடப் போவ தில்லை. டெல்லியில் ஆட்சிபுரி வோர் ஏற்கெனவே சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்திக் கொண்டுவிட்டதால் நாங்கள் புதிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. இந்தப் போராட்டம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாலைகள் மற்றும் நெடுஞ் சாலைகளில் நடைபெறும். அனைத்து வாகனங்களும் நிறுத் தப்பட்டு, அதில் இருப்பவர்களுக்கு தண்ணீரும் உணவும் வழங்கப் படும். விவசாயிகளுக்கு எதிராக அரசின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் எடுத்துக் கூறப்படும்.

இந்த மறியல் போராட்டம் விவசாயிகள் நடத்தும் ஒரு சித்தாந்தப் புரட்சி ஆகும். போன்கள், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களுடன் இந்தப் போராட்டத்துக்கு தொடர்பில்லை.

இவ்வாறு டிகைத் கூறினார்.

பாதுகாப்பு அதிகரிப்பு

விவசாயிகளின் நாடு தழுவிய மறியல் போராட்ட அழைப்பை தொடர்ந்து, டெல்லி போலீஸார் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள் ளனர். காஜிபூர் எல்லையில் வாகனங்களை தடுத்து நிறுத்த, பல அடுக்கு தடுப்புகளை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தடுப்புகளை எவரும் கடக்க முடியாத வகையில் முள்கம்பி வேலிகளையும் அமைத்துள்ளனர்.

சட்டம், ஒழுங்கை பராமரிக்க ஹரியாணா போலீஸாரும் பாது காப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். முக்கிய சந்திப்புகள் மற்றும் சாலைகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கும்படி போலீஸ் உயரதி காரிகள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். சூழ்நிலை மற்றும் உத்தரவுக்கு ஏற்ப போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x