

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது, சீக்கியர்களின் புனித நூல் எரிக்கப் பட்டதைக் கண்டித்து பரிட்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீ ஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினரை ராகுல் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
மேலும் பதிண்டா மாவட்ட விவசாயிகளை சந்தித்துப் பேசவும் ராகுல் திட்டமிட்டுள்ளார். இந்தத் தகவலை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினரை கேஜ்ரிவால் ஏற்கெனவே சந்தித்து ஆறுதல் கூறினார்.