அமெரிக்க டாலர்கள் கடத்தல் வழக்கில் கேரள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நீதிமன்றம் ஜாமீன்

அமெரிக்க டாலர்கள் கடத்தல் வழக்கில் கேரள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நீதிமன்றம் ஜாமீன்
Updated on
1 min read

அமெரிக்க டாலர்கள் கடத்தல் வழக்கில் கேரள அரசின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தர விட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக பணி புரிந்த ஸ்வப்னா கைது செய்யப் பட்டார். தங்கக் கடத்தல் தொடர் பாக சுங்கத்துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. கடத்தலில் தொடர் புடைய பலரும் சிக்கினர்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், கேரள முதல்வர் பினராயி விஜய னின் முன்னாள் முதன்மைச் செய லருமான சிவசங்கரும் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், 1 லட்சத்து 90ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கடத்தப் பட்ட வழக்கிலும் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரிந்ததை யடுத்து, அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். தங்கக் கடத்தல் வழக்கில் உயர் நீதிமன் றம் சிவசங்கருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் சிவசங்கரின் ஜாமீன் மனுவை விசாரித்த கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன் றம், அவருக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. 2 லட்ச ரூபாய் சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கு 2 தனி நபர் உத்தரவாதத்தின் பேரிலும் சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 98 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் சிவசங்கர் ஜாமீனில் விடுதலை ஆகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in