

வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா பகுதியில் நாளை முதல் பிப்ரவரி 5ம் வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவில் இன்று முதல் பிப்ரவரி 5ம் தேதி வரையும், மத்தியப் பிரதேசத்தில் பிப்ரவரி 4ம் தேதி முதல் 5ம் தேதி வரையும், கிழக்கு உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள மத்திய இந்தியா பகுதியில் அடுத்த மூன்று முதல் 4 நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இங்கு தற்போது நிலவும் குளிரும் அடுத்த 24 மணி நேரத்தில் குறையும் வாய்ப்புள்ளது.