Last Updated : 05 Nov, 2015 07:44 AM

 

Published : 05 Nov 2015 07:44 AM
Last Updated : 05 Nov 2015 07:44 AM

கர்நாடகாவில் இந்துத்வா அமைப்பினர் அத்துமீறல்: முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல் - ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார்?

மாட்டிறைச்சி சாப்பிட்டால் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என பாஜக தலைவர் பகிரங்க மிரட் டல் விடுத்ததை தொடர்ந்து, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவ ருக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள் ளனர். முதல் கட்டமாக அந்த அமைப் பினர் முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பியுள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தரா மையா கடந்த வாரம் த‌னக்கு பிடித்தால் மாட்டிறைச்சி சாப்பிடு வேன். அதனை யாரும் தடுக்க முடியாது என கூறியிருந்தார். இதையடுத்து விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கர்நாடகாவில் பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பாஜகவை சேர்ந்த ஷிமோகா மாவட்ட செயலாள ரும், மூத்த தலைவருமான சென்ன பசப்பா, ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டை வெட்டி சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன். அவரது தலையில் கால்பந்து விளை யாடவும் தயங்க மாட்டேன்’’ என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஷிமோகா போலீஸார் சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிர மோத் முத்தாலிக், ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் எனக்கூறி, இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக சித்தராமையா இந்துக்களிடம் பகி ரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு என் மீது 90 வழக்குகளை தொடுத்துள்ளது.

இதனை சட்டரீதியாக எதிர் கொண்டாலும், அரசியல் ரீதியாக தக்க பதிலடி கொடுப்பேன். மாட்டின் இறைச்சியை சாப்பிடும் சித்தராமையா, பன்றியின் இறைச் சியை சாப்பிடுவாரா? பன்றி இறைச் சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்த ராமையாவுக்கு தைரியம் இருக் கிறதா?''என கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து பீஜாப்பூர் மாவட்ட‌ ஸ்ரீராமசேனா அமைப்பின் சார்பாக சித்தராமையாவுக்கு ஒரு கிலோ பன்றிக்கறி பார்சல் மூலமாக அதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் அனுப்பி வைத்தார். இதே போல மாநிலம் முழுவதிலும் இருந்து சித்தராமையாவுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பன்றி இறைச்சி பார்சல் அனுப்ப வேண் டும் எனவும் வேண்டுகோள் விடுத் தார். சென்னபசப்பா கைது செய்யப் பட்டதைப் போல, பிரமோத் முத்தாலிக்கும் ஸ்ரீராம் சேனா அமைப்பினரும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பிர மோத் முத்தாலிக் நுழைய முயன் றார். அவரை தடுத்து நிறுத்திய பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம், மத கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பிரமோத் முத்தாலிக் ஒரு மாதத்துக்கு பாகல்கோட்டை மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x