மலேசியா, சிங்கப்பூரில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

மலேசியா, சிங்கப்பூரில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப் பயணமாக மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, தீவிரவாத எதிர்ப்பு, பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

வரும் சனிக்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்கிறார். இந்த மாநாடுகளில் உரையாற்ற உள்ள மோடி, மிகப்பெரும் அச்சுறுத்த லாக உருவெடுத்துள்ள தீவிர வாதத்தை எதிர்த்துப் போரிடவும் பொருளாதார வளர்ச்சிக்கும் கூட்டாக பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்த உள்ளார்.

மேலும் அந்நாட்டு தலைவர் களை சந்தித்துப் பேச உள்ள மோடி, பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோ சனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது பல்வேறு புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத் தாக உள்ளன.

3 நாள் மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு திங்கள்கிழமை சிங்கப்பூர் செல்லும் மோடி. அந் நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, இணையதள பாது காப்பு, கலாச்சாரம் மற்றும் நகர்ப்புற மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பின்னர் அங்குள்ள முன்னணி நிறுவன சிஇஓ-க்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை தனித்தனியாக சந்தித்துப் பேசவும் மோடி திட்டமிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in