

சிபிஐ முன்னாள் துணை இயக்குநரும், முன்னாள் டெல்லி மாநகர காவல் ஆணையருமான நீரஜ் குமார் ‘டயல் டி பார் டான்’ (Dail D for DON) என்ற நூலை நேற்று மும்பையில் வெளியிட்டார்.
இவர் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், மும்பை தாக்குதல் சம்பவம் உட்பட நாட்டை உலுக்கிய பல்வேறு முக்கிய வழக்குகளில் விசாரணை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். நீரஜ் குமார் ஓய்வு பெறுவதற்கு முன்பு தாவூத், அவருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மூன்று முறை பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீரஜ் குமார் தனது நூலில், தாவூத் குறித்து இதுவரை வெளிவராத சில தகவல் களை விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக, “1990-களின் தொடக்கத்தில் இந்தி திரைப்பட நடிகை ஒருவரை தாவூத் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். அந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையை பெங்களூரில் வசிக்கும் நடிகையின் சகோதரி எடுத்துச் சென்றுவிட்டார்.
பெங்களூருவில் வசித்து வரும் தனது மகனுடன் தாவூத் இப்ராஹிம் பல முறை தொலைபேசியில் பேசி இருக்கிறார்” என நீரஜ் குமார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தாவூத் மகன் குறித்து கர்நாடக குற்றப்பிரிவு போலீஸார், பழைய கோப்பு களைக் கொண்டு ஆராய்ந்து வருவ தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. தொடக்க காலத்தில் தாவூதுடன் நெருக்கமாக இருந்த தாதாக்களின் உதவியுடன் அவரது மகனை தேடும் முயற்சியில் கர்நாடக குற்றப்பிரிவு போலீஸார் இறங்கியுள்ளனர்.