

பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு (மெய்நிகர் கரன்சி) தடை விதிக்கத் தேவையான சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கு மாற்றாக அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக கொண்டுவரப்பட உள்ள சட்டமானது ரிசர்வ் வங்கி வெளியிடும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை அங்கீகரிக்கும் வகையிலும் இருக்கும் எனமக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டஆவணங்களில் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த மசோதா நடப்புநாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கும் தடை விதிக்கவகை செய்யும் வகையில்இந்த மசோதா வடிவமைக்கப் பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய அரசு நியமித்த குழு அனைத்து வகையான கிரிப்டோ கரன்சிகளுக்கும் தடை விதித்தது. இத்தகைய பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத்தண் டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல இக்குழு அரசுத் தரப்பில் கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது. இந்த கரன்சியை வழக்கமான ரூபாய் நோட்டுகளைப் போல வங்கிகளில் பரிவர்த்தனை செய்யும் வகையில் வடிவமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரலில் அனைத்து வங்கிகளுக் கும் ரிசர்வ் வங்கி ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில்அனைத்து வகையான மெய்நிகர் கரன்சிகளுக்கும் 3 மாதங்களுக்குள் தடை விதிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
ரிசர்வ்வங்கி அனைத்து கிரிப்டோ கரன்சிகளுக்கும் தடைவிதித்திருந்த போதிலும், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதற்கு அனுமதி அளித்தது. இது ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதைத் தொடர்ந்தே சட்டப்படி தடை விதிக்கும் மசோதா இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வளர்ச்சிய டைந்த நாடுகளில் இது தொடர் பாக உறுதியான முடிவு எதுவும்எடுக்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்க முடியாமல் திணறுகின்றன. இருந்தாலும் பெரும்பாலான சட்டவிரோத செயல்பாடுகளுக்கு இதுபோன்ற மெய்நிகர் கரன்சிதான் காரணமாக உள்ளது. இது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாக அமைவதால் பெரும்பாலான நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.