Last Updated : 31 Jan, 2021 02:00 PM

 

Published : 31 Jan 2021 02:00 PM
Last Updated : 31 Jan 2021 02:00 PM

குடியரசு தினத்தில் தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தால் தேசமே மிகுந்த வருத்தமடைந்தது: மன் கி பாத்தில் பிரதமர் மோடி வேதனை


குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின் போது, தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தால் தேசமே மிகுந்த வேதனை அடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 73-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசிநாள் இன்று. ஜனவரி மாதம் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது அதற்குள் முடிந்துவிட்டதா என நீங்கள் நினைக்கலாம். காலம் வேகமாகச் சுழன்றுவருகிறது.

இந்த மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணியினர் நல்ல செய்தியை அளித்துள்ளார்கள். ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வென்றுள்ளார்கள்.

தொடக்கத்தில் தோல்வியைச் சந்தித்தாலும், வெற்றியுடன் இந்திய அணி தொடரை முடித்துள்ளது. கடின உழைப்பும், அணியின் உழைப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது.

இந்தியாவில் தயாரி்க்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் சுயசார்பின் அடையாளம், சுயகவுரவத்தின் அடையாளம். உலகிலேயே இந்தியாவில் தொடங்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து முகாம்தான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உலகில் எந்த நாட்டையும்விட நம்நாட்டில்தான் வேகமாகத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 15 நாட்களில் 30 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கையை அடைய அமெரி்க்காவுக்கு 18 நாட்கள் ஆனது, பிரிட்டனுக்கு 36 நாட்கள் ஆனது.

இந்த ஆண்டு நாம் 75-வது சுதந்திரனத்தைக் கொண்டாடப்போகிறோம். சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள், வீரர்களை நினைவு கூற இது சரியான நேரம்.

கடந்த 1932-ம் ஆண்டில் இளம் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்கள் ஜெய் ஹிந்ந்த், பாரத்மாதா வாழ்க என கோஷம்போட்டதால், ஆங்கிலோயர்களால் கொல்லப்பட்டார்கள் என நமோ செயலி வழியாக ஜெய் ராம் விபால்வா என்பவரால் அறிந்தேன்.

இதேபோன்று இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை எழுத ஊக்கப்படுத்த வேண்டும். 75வது சுதந்திரதினம் குறித்து அனைத்து மாநிலங்களிலும், மொழிகளிலும் இளைஞர்களையும் கட்டுரை எழுத வைக்கலாம்.இதற்கான முழுமையான தகவல்களை கல்வித்துறை இணையதளத்தில் காணலாம்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடந்த டிராக்டர் பேரணியின் போது தேசியக் கொடிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பார்த்தபோது, என் மனது வேதனைக்குள்ளானது, தேசமே மிகுந்த வேதனையில் ஆழ்ந்தது.

ஹைதராபாத்தில் பவன்பள்ளியில் உள்ள காய்கறிச் சந்தையில் நாள்தோறும் வீணாகும் கழிவுகள் மூலம் 500 யூனிட் மின்சாரமும், 30 கிலோ பயோ கேஸ் தயாரிக்கப்படுவதை நினைத்து பெருமையும் , மகிழ்ச்சியும் அடைகிறேன்.

அதேபோல ஹரியானாவில் பஞ்சகுலா பஞ்சாயத்தில் உள்ள பாதுத் கிராமத்தில் கழிவு நீரே சுத்திகரித்து மீண்டும் நிலத்துக்கு பாய்ச்சும் திட்டத்தைக் கேட்டும் மகிழ்ச்சி அடைந்தேன்.

கேரளாவில் வெம்பநாடு ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கலை என்எஸ் ராஜப்பன் சேகரித்து சுத்தப்படுத்துவதை அறிந்தேன். மற்றொரு பெருமைக்குரிய செய்தியாக, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களுருவுக்கு பெண் பைலட்கள் இயக்கிய விமானம் வந்து சேர்ந்தது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x