

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜி, குரல் மாதிரி சோதனை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, சிலரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை சிபிஐ ஆராய்ந்து வரு கிறது. இதில் சில பதிவுகள் இந்திராணியின் குரல் போல இருப்பதால் அவரது குரல் மாதிரியை ஆராய முடிவு செய் துள்ளது. இதற்கு அனுமதி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீது நேற்று விசா ரணை நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்திராணி, குரல் மாதிரி சோத னைக்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, இந்திராணியிடம் குரல் மாதிரி சோதனை நடத்த நீதிபதி ஆர்.வி.அடோன் அனுமதி வழங்கினார்.