

தமிழகத்தில் 97,126 பேர் உட்பட, நாடு முழுவதும் 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு (35,00,027) கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.7 லட்சத்திற்கும் குறைவாக (1,69,824) பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.58 சதவீதம் மட்டுமே ஆகும்.
ஒரு வாரத்தில் ஏற்படும் பாதிப்பு 9 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் ஒரு வாரத்தின் பாதிப்பு 12.20 சதவீதமாகும், அதைத்தொடர்ந்து சத்திஸ்கரில் 7.30 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளையில் 27 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் இந்த சதவீதம், தேசிய அளவைவிட குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (96.98%). இது உலகளவில் அதிகமான சதவீதத்தில் ஒன்றாகும்.
நாட்டில் தற்போதுவரை 1.04 கோடிக்கும் அதிகமானோர் (1,04,09,160) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,808 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் 5.7 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று (ஜனவரி 30, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 97,126 பேர் உட்பட, நாடு முழுவதும் 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு (35,00,027) கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 10,809 முகாம்களில் 5,71,974 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 63,687 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 6,398 பேரும், மகாராஷ்டிராவில் 2,613 பேரும், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 607 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 13,083 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.
நேற்று கேரளாவில் 6,268 பேரும், மகாராஷ்டிராவில் 2,771 பேரும், தமிழகத்தில் 509 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 137 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.