

மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் உண்மையானது தனது சுயபலத்தில் நிற்கும் என்றவர் காந்தி என அவரது 74-வது நினைவு தினத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய விடுதலை வரலாற்றின் எந்தவொரு அடுக்கிலும் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த தியாக வாழ்க்கையை வாழ்ந்தவர் காந்தி. அவர் கொண்ட கொள்கையின் உறுதியும் தனது விடாப்பிடியான அறப்போராட்டமுமே மானுடம் பேசும் கதைகளாகும்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று. நாதுராம் கோட்சே என்பவரால் 1948-ல் இதே நாளில் மகாத்மா காந்தி சுடப்பட்ட தினத்தையொட்டி ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காந்தியின் 74-வது நினைவு தினமான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் உண்மையானது என்றும் நிலைத்து நிற்கும். ஏனெனில் அது தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ளும் சுயபலம் கொண்டது என்று கூறியுள்ளார் மகாத்மா காந்தி.
அவரது நினைவு தினத்தில் எனது தாழ்மையான அஞ்சலியை செலுத்துகிறேன்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.