

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள சசிகலாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் நிலவு வதால், அவர் விரைவில் டிஸ் சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கடந்த 10 நாட்களாக கரோனா தொற்றுகாரணமாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரதுஉடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:
சசிகலா தற்போது சதாரண கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நாடித்துடிப்பு, சுவாசம், ஆக்ஸிஜன் அளவு ஆகியவை சீராக உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவில் சிறிய அளவில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. 3-வது நாளாக ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் சுயமாக சுவாசிக்கிறார். அவரது உடலில் கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் அவரை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
எளிய உணவை அவரே உட்கொள்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். சசிகலா மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு 10 நாட்கள் ஆவதால் அவருக்கு மீண்டும் ஒருமுறை சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறோம். அதன் முடிவுகள் வந்த பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்து கூற முடியும். ஒருவேளை அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தால், உடனடியாக வீட்டுக்கு அனுப்பப் படுவார். தற்போதைய நிலையில் அவரது உடல்நிலையை வைத்துப் பார்க்கும்போது விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.