

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன் தொடர்ந்து பாடல்களை இயற்றி பாடி வந்தார். இந்நிலையில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, தமிழக போலீஸார் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பெங்களூரு டவுன் ஹால் எதிரே நேற்று கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் கலை இலக்கிய பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூ ருவைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரியில் இருந்து மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களும், பாசிச எதிர்ப்பு கூட்டணி அமைப்பைச் சேர்ந்தவர் களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் ஏராளமான கன்னட அமைப்பினரும் பங்கேற்றனர்.