Last Updated : 29 Jan, 2021 10:55 AM

 

Published : 29 Jan 2021 10:55 AM
Last Updated : 29 Jan 2021 10:55 AM

ஆளுநர், துணைவேந்தராக வேண்டுமெனில் ஆர்எஸ்எஸ்காரர்களாக இருந்தால்போதும்; வேறு எந்தப் புரிதலும் தேவையில்லை: ராகுல் காந்தி தாக்கு

நாட்டில் ஆளுநர், துணைவேந்தராக பதவியேற்கவேண்டுமெனில் வேறு எந்தப் புரிதலும் தேவையில்லை ஆர்எஸ்எஸ்காரராக இருந்தால்போதும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல்-மே மாதங்களில் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநத எம்.பியுமான ராகுல் காந்தி கேரளாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர், நேற்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி இது குறித்து கூறியதாவது:

எந்தவொரு உரையாடலும், கலந்துரையாடலும் இல்லாமல் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கொள்கை மாணவர்களுக்கு நல்லதுதானா என்று ஆசிரியர்களிடம் கூட இதுபற்றி கருத்து கேட்காமல் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் சோகமானது, இது நம் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது இந்தியாவின் நிறுவன கட்டமைப்பு மற்றும் நமது கல்வி முறை மீதான கருத்தியல் தாக்குதல் ஆகும், அங்குள்ள ஒருவருக்கும் இதுகுறித்த எந்த புரிதலும் தேவைப்படவில்லை. அவர்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருக்கும் வரை, நீங்கள் துணைவேந்தராகவும், ஆளுநராகவும், நாட்டில் நீங்கள் எந்த பாத்திரத்தை வகிக்க விரும்புகிறீர்களோ அதை நீங்கள் செய்யலாம்.

இது துயரமானது, இதை நாம் நமது முழு பலத்துடனும் போராட வேண்டும். பலவிதமான கருத்துக்கள் ஒன்றுக்கொன்று அமைதியாக சவால் விடுவதற்கான சுதந்திரம் இருந்தால் மட்டுமே இந்தியாவின் கல்வி வலுவானதாக இருக்க முடியும்.

மத்திய அரசு கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது இந்தியாவின் நிறுவன கட்டமைப்பு மற்றும் நமது கல்வி முறை மீதான கருத்தியல் தாக்குதல் ஆகும், அங்குள்ள ஒருவருக்கும் இதுகுறித்த எந்த புரிதலும் தேவைப்படவில்லை. ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருக்கும் வரை, நீங்கள் துணைவேந்தராகவும், ஆளுநராகவும், நாட்டில் நீங்கள் எந்த பாத்திரத்தை வகிக்க விரும்புகிறீர்களோ அதை நீங்கள் செய்யலாம்.

இது துயரமானது, இதை நாம் நமது முழு பலத்துடனும் போராட வேண்டும்.

ஆசிரியருக்கும் மாணவருக்குமான மனித தொடர்பு மற்றும் உண்மையான உரையாடல்களே அறிவின் மையமாகும். கல்வியை டிஜிட்டல் மயமாக்கினால் அது எப்படி சாத்தியமாகும். நீங்கள் ஆசிரியரை இணையம் அல்லது கணினி மூலம் மாற்ற முடியாது. ஒரு ஆசிரியர் என்பது தகவல்களை மாற்றுவது மட்டுமல்ல. எந்த ஒரு கணினியும் செய்ய முடியாத ஒரு அறிவை ஒரு ஆசிரியர் குழந்தைக்கு அளிக்கிறார்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x