

பறவைக்காய்ச்சல் காரணமாக பண்ணைகளில் அழிக்கப்பட்ட பறவைகள், முட்டைகளுக்காக விவசாயிகளுக்கு மத்திய அரசின் கால் நடை பராமரிப்புத்துறை 50:50 என்ற அடிப்படையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இழப்பீடு வழங்கி வருகிறது.
கேரளா, ஹரியாணா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தராகண்ட், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களில் கடந்த 28-ம் தேதி வரை பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் காகம், வெளிநாட்டு பறவைகள், வனப் பறவைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
செயல் திட்டத்தின் படி பண்ணைகளில் அழிக்கப்பட்ட பறவைகள், முட்டைகளுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் கால் நடை பராமரிப்புத்துறை 50: 50 என்ற அடிப்படையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இழப்பீடு வழங்கி வருகிறது.
அனைத்து மாநிலங்களும் பறவைக் காய்ச்சல் நிலவரத்தை தினந்தோறும் மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றன. அதன்படி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.