பிஹாரில் முஸ்லிம்கள் ஆதரவை பெற தொடரும் போட்டி: நிதிஷ் குமார் கட்சியில் இணைந்தார் பகுஜன் சமாஜின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ

பிஹாரில் முஸ்லிம்கள் ஆதரவை பெற தொடரும் போட்டி: நிதிஷ் குமார் கட்சியில் இணைந்தார் பகுஜன் சமாஜின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ
Updated on
1 min read

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெறுகிறது.

இங்கு கடந்த தேர்தலில் என்டிஏவை எதிர்த்துப் போட்டியிட்ட மெகா கூட்டணி 15 தொகுதிகள் வித்தியாசத்தில் ஆளும் வாய்ப்பை இழந்தது. இதற்கு, ஹைதராபாத் எம்.பி.அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி3-வது அணி அமைத்து போட்டியிட்டது காரணமானது.

எனவே ஒவைசியின் முஸ்லிம் அரசியலை சமாளிக்க பாஜக ஒரு முஸ்லிம் தலைவரை களம்இறக்கியது. இதன்படி முன்னாள்மத்திய அமைச்சரான ஷாநவாஸ்உசைன், பிஹார் மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய செய்தித் தொடர்பாளராகியும் சுமார் 7 ஆண்டுகளாக முக்கியத்துவம் இல்லாமல் இருந்த அவருக்கு மாநில அரசியலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் நிதிஷ் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் நிறுத்தப்பட்ட முஸ்லிம்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் தனது கட்சியிலும் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ இருக்க வேண்டும் எனநிதிஷ் விரும்பினார். இதற்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ்(பிஎஸ்பி) கட்சியின் ஒரே எம்எல்ஏவான ஜமா கானை நிதிஷ் தனது கட்சியில் சேர்த்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜேடியு நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “முஸ்லிம் எம்எல்ஏக்கள் அதிகமுள்ளஆர்ஜேடியில் இருந்து அவர்களை இழுப்பது சிரமம் என்பதால் பிஎஸ்பி குறிவைக்கப்பட்டது. கட்சியில் இணைந்தவருக்கு நாங்கள் அமைச்சர் பதவி வழங்கவுள்ளதால் எங்கள் கட்சியும்முஸ்லிம் அரசியலை சமாளிக்க முடியும்” என்றனர்.

பிஹாரில் பாஜகவின் 2 துணைமுதல்வர்கள் உள்பட 14 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு அதிக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அமைச்சரவை விரிவாக்கம் அவசியமாகிறது. இந்நிலையில் சம அளவில் அமைச்சர்களை அமர்த்த நிதிஷ்விரும்புகிறார். இதில் மோதல் ஏற்பட்டால் ஆட்சிக்கு நெருக்கடிஉருவாகும் என்பதால் அந்த நிபந்தனையை பாஜக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in