

சித்தூர் மேயர் அனுராதா, அவரது கணவர் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் சிண்ட்டு என்கிற சந்திரசேகர் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஆந்திர போலீஸார் அறிவித் துள்ளனர்.
சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா, அவரது கணவரும் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட துணைத் தலைவருமான கட்டாரி மோகன் ஆகியோர் கடந்த செவ்வாய்க் கிழமை சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் இதுவரை 3 பேர் சரணடைந்துள்ளனர். 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். முக்கிய குற்றவாளியான சிண்ட்டு வெளிநாடுகளுக்கு தப்பிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று கூடுதல் ஐஜி டாகூர் சித்தூரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் விசாரணை செய்தார். அவர் கூறியபோது, இந்த கொலை வழக்கில் சிண்ட்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அவரை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. அவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.