

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் தீப் சித்து டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்குதொடக்கம் முதலேஆதரவு தெரிவித்துவருகிறார். விவசாயிகள் நேற்று முன்தினம்நடத்திய டிராக்டர் பேரணியின்போது கலவரம் ஏற்பட்டது.
செங்கோட்டை பகுதியில் டிராக்டர் ஒன்றில் நடிகர் தீப் சித்துவும்இருந்தார். சீக்கியர் கொடியை செங்கோட்டையில் ஏற்ற அவர்தான் எடுத்துக் கொடுத்தார் என்றும் இதனால் போராட்டம் திசைமாறி கலவரம் ஏற்பட்டதாகவும் தீப் சித்து மீது விவசாய சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, தீப் சித்து முகநூலில், ‘‘வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடையாளமாகவேசெங்கோட்டையில் சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி அகற்றப்படவில்லை. மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது மக்கள் நடத்தும் போராட்டத்தில் அவர்களின் கோபம் இயற்கையானது. இன்றைய சூழலில் அந்தக் கோபம் வெடித்துள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள், மத்தியஅரசின் கட்டளைப்படி விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தீப் சித்து செயல்படுகிறார் என்றும்கூறியுள்ளன.