Last Updated : 11 Nov, 2015 01:10 PM

 

Published : 11 Nov 2015 01:10 PM
Last Updated : 11 Nov 2015 01:10 PM

உல்பா தலைவர் அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம்

கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம்.

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டார். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உல்பா தீவிரவாத இயக்கத் தலைவர் சேத்தியாவை வங்கதேசம் இன்று (புதன்கிழமை) காலை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

48 வயதான அனுப் சேத்தியா தடை செய்யப்பட்ட யுனைடட் லிபரேஷம் பிரண்ட் ஆஃப் அசாம் (உல்பா) இயக்கத்தின் நிறுவனர் பொதுச் செயலாளர் ஆவார். அவர் மீது கொலை, ஆட் கடத்தல், வங்கிக் கொள்ளை, பணம் பறித்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் அவரை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உயரதிகாரிகள் கூறும்போது, "பிரதமர் மோடியில் தலையீட்டாலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முயற்சிகளாலும் கோபால் பருவா என்ற அனுப் சேத்தியாவை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக, அனுப் சேத்தியாவை நாடு கடத்துமாறு வங்கதேசத்திடம் இந்தியா கோரி வந்தது. ஆனால், அண்மையில்தான் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு இதற்கு ஒப்புக்கொண்டது. இதற்காக சேத்தியாவிடம் வாக்குமூலத்தை பெற்றது வங்கதேசம். அந்த வாக்குமூலத்தில் தான் இந்தியா திரும்பவே விரும்புவதாக சேத்தியாக குறிப்பிட்டிருக்கிறார்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x