பம்பையில் ஆடைகள் வீச விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்கிறது தேவஸ்வம் போர்டு

பம்பையில் ஆடைகள் வீச விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல் செய்கிறது தேவஸ்வம் போர்டு
Updated on
1 min read

பம்பை நதியில் பக்தர்கள் தங்களது பழைய ஆடைகளை வீசியெறிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பம்பை வழியாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அங்கு புனித நீராடியதும், தங்களது ஆடைகளை நதியிலேயே வீசி யெறிவதால் மிகுந்த மாசு ஏற்பட்டு அசுத்தம் அடைவதாக புகார் எழுந்தது. இதை தடுக்கும் விதமாக ஆடைகளை வீசியெறியும் பக்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கடந்த மாதம் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தற்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 17-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, சபரிமலைக்கு நாள்தோறும் திர ளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பம்பை யில் ஆடைகளை வீசியெறிந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் நடவடிக்கை எடுத்திருப் பதாக கூறப்படுகிறது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

போலீஸாரின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பக்தர்களின் பாரம்பரிய நம்பிக்கையை சட்டத்தின் மூலம் நசுக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுப்பினர் அஜெய் தாரயில் கூறும்போது, ‘‘பம்பையில் ஆடைகளை வீசியெறி யும் பக்தர்களை கைது செய்வதோ அல்லது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோ பிரச்சினைக்கு தீர்வாக இருக்காது. பம்பையின் துாய்மையை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். ஆனால், அதற்கு கால அவகாசம் பிடிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் தடையை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய பரிசீலித்து வருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in