

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமேலவைத் தேர்தலில் நடிகையும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை நேற்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 25 சட்டமேலவை உறுப்பினர்களின் பதவி காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, வரும் டிசம்பர் இறுதி யில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதையடுத்து காங் கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.
நடிகையும், மண்டியா தொகுதி யின் முன்னாள் எம்பி-யுமான ரம்யா கடந்த மக்களவைத் தேர் தலில் தோல்வி அடைந்ததால் அரசியலில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தார்.
இந்நிலையில் நேற்று காங்கி ரஸின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து ரம்யா சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸின் தலைவரும், உள்துறை அமைச்சருமான ஜி. பரமேஷ்வர், மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இது தொடர்பாக ரம்யா கூறும் போது, ''மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க விரும்புகிறேன். இது தொடர்பாக கட்சியின் மேலிடத்துடனும், மூத்த தலைவர்களுடனும் கலந்து ஆலோசித்துள்ளேன்.
மண்டியா, பெங்களூரு ஊரக தொகுதியில் எனக்கு நல்ல பெயர் இருப்பதால், நிச்சயம் வெற்றிபெறுவேன்'' என்றார்.