Published : 25 Jan 2021 02:57 PM
Last Updated : 25 Jan 2021 02:57 PM

கரோனாவால் அன்றாட உயிரிழப்புகள் : 8 மாதங்களுக்குப் பிறகு 131 ஆகக் குறைவு

இந்தியாவில், கரோனா நோய் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.84 லட்சமாகக் (1,84,182) குறைந்துள்ளது.

இது மொத்த பாதிப்பில் வெறும் 1.73 சதவீதமாகும்.

• பெரும்பாலான பாதிப்புகள் இரண்டு மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 64.71 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிராவை மட்டுமே சேர்ந்தவர்கள்.

• கேரளாவில் 39.7 சதவீதத்தினரும், மகாராஷ்டிராவில் 25 சதவீதத்தினரும் சிகிச்சை பெறுகின்றனர்.

• கடந்த 24 மணி நேரத்தில் தற்போதைய மொத்த பாதிப்பில் 226 குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,203 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், 13,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

• கடந்த 24 மணிநேரத்தில் 131 உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. இது கடந்த எட்டு மாதங்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

• இந்தியாவில் இன்றுவரை மொத்தம் 19,23,37,117 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• இன்று (ஜனவரி 25, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 61,720 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 16,15,504 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

• கடந்த 24 மணி நேரத்தில் 694 அமர்வுகளில் 33,303 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 28,614 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

• 1.03 கோடி பேர் (1,03,30,084) இதுவரை குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

• குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 1,01,45,902 ஆக பதிவாகியுள்ளது.

• தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,173 பேரும், மகாராஷ்டிராவில் 1,743 பேரும், அதைத்தொடர்ந்து குஜராத்தில் 704 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x