

மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்தியஅரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.
இதனிடையே, இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்தனர். இப்பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
இந்நிலையில், டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்களுக்கு டெல்லி காவல் துறைநேற்று அனுமதி வழங்கியது.எனினும், 100 கி.மீ. வரை இப்பேரணி செல்லலாம் என தெரிவித்துள்ளது.