Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கும் யோசனையை ஏற்க மறுப்பு; விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு

விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டவாறு டிராக்டர் பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிள்ளனர். இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் விவசாயிகள் நேற்று டிராக்டர் அணிவகுப்பு நடத்தினர். படம்: பிடிஐ

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்கள் தொடர் பாக விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக் கும் அரசின் பரிந்துரை மீது விவசாயி கள் விவாதிக்க விரும்பினால் மட் டுமே இனி அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த செப்டம் பரில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி யின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 10 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இதில் உடன் பாடு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை 12 முதல் 18 மாதங் களுக்கு நிறுத்தி வைக்கவும் பிரச் சினைக்கு தீர்வு காண கூட்டுக் குழு ஏற்படுத்தவும் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தெரிவித்தது.

இருப்பினும் இதனை நிராகரிப் பதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா நேற்று முன்தினம் அறி வித்தது. புதிய வேளாண் சட்டங் களை முற்றிலும் வாபஸ் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தர வாதம் அளிக்க வேண்டும் என்ற 2 முக்கிய கோரிக்கைகளில் உறுதி யாக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது. மேலும் திட்ட மிட்டபடி டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்கில் 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த சட்டங்களை ஆய்வு செய்ய 4 உறுப்பினர் குழுவையும் அமைத்தது. இதில் வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, பாரதிய கிஷான் சங்கத்தின் (மன் பிரிவு) தலைவர் பூபிந்தர் சிங் மன், மகாராஷ்டிரா வைச் சேர்ந்த விவசாய சங்க (ஷேத்கரி சங்கடனா) தலைவர் அனில் கன்வத் ஆகியோர் இடம் பெறுவார்கள் என அறிவித்தது. இதில் இருந்து பூபிந்தர் சிங் மன் விலகினார். இதையடுத்து மற்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடைமுறைகளை நேற்று முன்தினம் தொடங்கினர்.

இந்நிலையில் விவசாயிகள் - மத் திய அரசு இடையிலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை டெல்லி விக்யான் பவனில் நேற்று காலை தொடங்கியது. மத்திய அரசு தரப்பில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த் தக இணை அமைச்சர் சோம் பிர காஷ் ஆகியோரும் விவசாயிகள் தரப்பில் 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அரசு தனது நிலைப்பாட்டை கடுமையாக்கிக் கொண்டது. இதுதொடர்பாக அரசுத் தரப்பில் கூறும்போது, “வேளாண் சட்டங்களில் எவ்வித குறைபாடும் இல்லை. என்றாலும் விவசாயி களை மதிக்கும் வகையில் இந்த சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க அரசு முன்வந்துள் ளது. இது மிகச்சிறந்த மற்றும் கடைசி வாய்ப்பாகும். இதுதொடர் பாக விவசாயிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலி யுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் தோமர் பேசும்போது, “அரசின் பரிந் துரைகள் தொடர்பாக விவசாயிகள் பேச விரும்பினால் மட்டுமே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும். உங்களுக்கு மிகச் சிறந்த பரிந்துரைகளை நாங்கள் வழங்கினோம். துரதிருஷ்டவசமாக அதனை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்” என்று கூறியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர்கள் – விவ சாய பிரதிநிதிகள் இடையிலான கூட்டம் 18 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும் எஞ்சிய நேரத்தில் விவசாய சங்கத்தினர் தனி அறையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகவும் போராட்டத்தை அமைதி வழியில் தொடரப்போவ தாகவும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அரசு தங்களை வெகுநேரம் காக்க வைத்து அவ மதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். நேற்றைய பேச்சுவார்த்தையில் இருதரப்பின ரும் தங்கள் நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை தொடர்பான முடிவும் எடுக்கப்படவில்லை.

அரசு வேலை

இதனிடையே பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் நேற்று கூறும்போது, “டெல்லி எல்லையில் நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 76 விவசாயிகள் இறந் துள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x