‘‘2021-ம் ஆண்டு புதிய நம்பிக்கைகளுடன் தொடங்கியுள்ளது’’- கோவிட் தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

‘‘2021-ம் ஆண்டு புதிய நம்பிக்கைகளுடன் தொடங்கியுள்ளது’’- கோவிட் தடுப்பூசி பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
Updated on
1 min read

2021-ம் ஆண்டு புதிய நம்பிக்கைகளுடன் தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

வாரணாசியில் கோவிட் தடுப்பூசி பயனாளிகளுடனும், தடுப்பூசியை செலுத்துபவர்களுடனும் பிரதமர் மோடி இன்று உரையாடினார்.

வாரணாசியில் கோவிட் தடுப்பூசி பயனாளிகளுடனும், தடுப்பூசியை செலுத்துபவர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி, 1:15 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பயனாளிகள், தடுப்பூசி குறித்த தங்களது முதல்கட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கரோனா தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் பிரதமர் மோடி கேட்டு அறிந்தார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் திட்டத்தை சுமுகமாக மேற்கொள்வது தொடர்பாக விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், இதர பங்குதாரர்களுடன் பிரதமர் தொடர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் ‘‘தடுப்பூசி இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் சென்று கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்கும் இந்தியா தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு புதிய நம்பிக்கைகளுடன் தொடங்கியுள்ளது.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in