போலீஸ் சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: மகாராஷ்டிராவில் மீண்டும் நடன பார்கள் - உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி

போலீஸ் சட்ட திருத்தம் நிறுத்தி வைப்பு: மகாராஷ்டிராவில் மீண்டும் நடன பார்கள் - உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி
Updated on
1 min read

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹோட்டல்கள், மது பார்களில் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மது பார்களில் இளம்பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், கலாச்சார சீரழிவு என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து, நடன பார்களுக்கு தடை விதிக்கும் வகையில், கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ‘பாம்பே போலீஸ் சட்டத்தில்’ மகாராஷ்டிரா அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் வேலை இழந்தனர்.

இதை எதிர்த்து ‘ரெஸ்டாரன்ட் அண்ட் பார் அசோசியேஷன்’ சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், ‘‘நடன நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது சட்டவிரோத மானது. தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வாழ்வாதாரத் துக்காக நிகழ்ச்சி நடத்துவதற்கு உரிமை உள்ளது’’ என்று கூறி அரசு கொண்டு வந்த தடையை கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி ரத்து செய்து தீர்ப்பளித்தது.

ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

எனினும், உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, மகாராஷ்டிர அரசு கொண்டு வந்த தடையை நீக்கி கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி, ‘மகாராஷ்டிரா போலீஸ் (2-வது சட்ட திருத்தம்) மசோதாவை சட்டப் பேரவையில் கொண்டு வந்து அரசு நிறைவேற்றியது. இதன் மூலம் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான லைசென்ஸ் வழங்க தடை விதிக்கப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து இண்டியன் ஹோட்டல் அண்ட் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி கள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சந்திர பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, மகாராஷ்டிர போலீஸ் 2-வது சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் நடன பார்கள் திறக்க வழி ஏற்பட்டுள் ளது. எனினும், நடன நிகழ்ச்சி களை மாநில அரசு நெறிப்படுத்த வேண்டும். பார்கள், ஹோட்டல் களில் ஆபாச நடனங்கள் நடக்காமல் லைசென்ஸ் வழங்கும் அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நடனமாடும் பெண்களின் கவுரவம் பாதிக் கப்படாமல் காக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின் வழக்கு விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in