புனே சீரம் நிறுவனத்தில் தீ விபத்து: 5 பேர் பலி; ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புனே சீரம் இந்தியா இன்ஸ்டிடியூட் வளாகத்தின் மருந்துகள் தயாரிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கும் கோவிட் தடுப்பூசிகளைth தயாரித்து விநியோகித்துவரும் புனே சீரம் இன்ஸ்டிடியுட்டில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.

நோய்த்தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்படும் இடமான மஞ்சரி கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டபோதிலும் மருந்துகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் நம்ரதா பாட்டீல் பிடிஐ செய்தி நிறுவனத்தியடம் கூறியதாவது:

சீரம் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள செஸ் 3 கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் வியாழக்கிழமை மதியம் 2.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர்.

கரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் இடத்திலிருந்து ஒரு பகுதியில்தான் தீ விபத்து ஏற்பட்டது. எனினும் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் எந்த பாதிப்பும் இல்லை.

முதன்மை தகவல்களின்படி, மூன்று பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் கட்டிடத்திலிருந்து புகை வெளியேறுவதை காணொலி வாயிலாக அறியமுடிந்தது.

இவ்வாறு காவல் துணை ஆணையர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்ஸ்டிடியூட் வளாகத்திற்கு தீணைப்பு வண்டிகள் விரைந்துள்ளதாக தெரிவித்தார்.

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சீரம் இன்ஸ்டிட்டியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in