புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆயோக் தரப் பட்டியலில் 3-வது இடத்தில் தமிழகம்

புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆயோக் தரப் பட்டியலில் 3-வது இடத்தில் தமிழகம்
Updated on
1 min read

புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்துஇந்திய மாநிலங்களின் செயல்பாட்டை நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முன்னணி மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் இடம்பிடித்துள்ளன.

புதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியல் விதிமுறைகளின்படி இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 3 வகைகளாகப் பிரித்து அவற்றை ஆய்வு செய்து நிதி ஆயோக் அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி 2020-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் சிஇஓஅமிதாப் கந்த் இதனை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் 5 மாநிலங்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா ஆகியவை இடம் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பிஹார் ஆகிய 3 மாநிலங்களும் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.

புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்துமாநிலங்களின் ஈடுபாடு, அவற்றின்ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள் ளது. மேலும் இந்த அறிக்கையில் மாநிலங்களின் கொள்கை சார்ந்த பலம் மற்றும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி உள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நிதி ஆயோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in