ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி மீதான தடை நீக்கம்: அரசின் முடிவுக்கு விட்டது உயர் நீதிமன்றம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி மீதான தடை நீக்கம்: அரசின் முடிவுக்கு விட்டது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் இறைச்சிக்காக மாட்டினத்தைத் கொல்வதற்கு தடை விதித்த உத்தரவை அம்மாநில உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. மேலும், இதுதொடர்பாக மாநில அரசு முடிவெடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வது மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க கோரும் மனுவை ஏற்ற உயர் நீதிமன்ற ஜம்மு அமர்வு, ரண்பீர் தண்டனைச் சட்டப்படி (ஆர்பிசி), மாடு வதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது. மேலும், அதனை உறுதியாக அமல் படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால், இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற நகர் அமர்வு முரண்பட்டது. இதையடுத்து மாநில அரசு சார்பில் தெளிவான விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத் தில் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, மாட்டிறைச்சி விற் பனைக்கு தடை விதித்து உத்தர விட்டப்பட்ட தீர்ப்புக்கு 2 மாத இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக புதிய அமர்வை ஏற்படுத்தி புதிய உத்தரவு வழங்கும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கள் முஸாபர் ஹுசைன் அட்டார், அலி முகமது மாக்ரே, தாஷி ரப்ஸ்டான் ஆகியோரடங்கிய அமர்வு, முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றனர். அதாவது, மாட்டினத்தைக் கொல்வதற்கு விதித்த தடையை நீக்கி, முந் தையை நிலையே தொடரட்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்விவகாரம் தொடர் பாக அரசும், பேரவையும் தீர் மானிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in