பாக். எதிர்ப்பு நிலையில் மாற்றமில்லை: சிவசேனா திட்டவட்டம்

பாக். எதிர்ப்பு நிலையில் மாற்றமில்லை: சிவசேனா திட்டவட்டம்
Updated on
2 min read

எந்த அளவுக்கு விமர்சனங்கள், அவதூறுகளை முன்வைத்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டோம் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான `சாம்னா’ தலையங்கத்தில் எழுதியிருப்ப தாவது:

சுதீந்திர குல்கர்னி முகத்தில் மை பூசப்பட்டதும், அவர் உடனடியாக தனது புகைப்படங்களை சமூக இணையதளங்களில் பரவவிட்டார். அதன் பின்னணியில் சிவசேனா இருப்பதாக குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டை ஏற்கிறோம். தேசப்பற்றாளராக, நாட்டைப் பாது காப்பது மகராஷ்டிரத்தின் பணி. எங்களின் பணியை நாங்கள் செய்கிறோம்.

நம் தேசத்தின் இறையாண் மைக்கு உண்மையான அச்சுறுத் தல் தீவிரவாதிகளோ, பயங்கரவாதி களோ அல்ல. குல்கர்னி போன்றவர் கள்தான் அச்சுறுத்தல். தேசத்தின் குரல்வளையை அவர்கள் அறுக் கின்றனர். குல்கர்னி போன்றவர் கள் இங்கிருக்கும்போது, தீவிர வாத செயல்களுக்காக கசாப் போன்றவர்களை பாகிஸ்தான் அனுப்பத் தேவையில்லை.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதி யின் தூதுவர் அல்லது மகாத்மா போலவும், அவரை எதிர்த்ததன் மூலம் சிவசேனா குற்றமிழைத்தது போலவும் இங்கு சூழல் உருவாக் கப்பட்டுள்ளது.

எந்த அளவுக்கு விமர்சனம், அவதூறு செய்யப்பட்டாலும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை சிவசேனா ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது.

இன்று வேறு குரலில் பேசும் கசூரி, அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவுக்கு எதிரான பிரிவினை வாதிகளை ஒன்றாக இணைப்பதில் முக்கிய கருவியாக இருந்தவர். இந்தியர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ள வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அந்த இலக்கில் தனக்கான பங்களிப்பை குல்கர்னி போன்றவர்கள் செய் கின்றனர். வாக்குக்காக பணம் கொடுத்த ஊழல் வழக்கில் பாஜக வுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய வர்தான் இந்த குல்கர்னி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கு பாராட்டு

சுதீந்திர குல்கர்னி மீது மை வீசிய 6 சிவசேனா தொண்டர்க ளுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பாராட்டு தெரி வித்ததாக தகவல் வெளியாகியுள் ளது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் விடு விக்கப்பட்ட அந்த 6 தொண்டர் களும் உத்தவின் வீட்டுக்கு அழைக் கப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளனர்.

இந்தியா பதில்

தனது நாட்டின் முக்கிய பிர முகர்கள் இந்தியாவுக்குச் செல்லும் போது அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவது குறித்து பாகிஸ்தான் கவலை தெரி வித்துள்ளது. “இந்தியாவிலுள்ள சில அடிப்படைவாத இயக்கங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடு படுகின்றன. வரும்காலத்தில் இவை நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள இந்தியா, “பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் நடத்த வேண்டியதில்லை” எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தான் பாகிஸ்தா னின் கைக்கூலி அல்ல, அமைதிக் கான தூதுவன் என சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் பாகிஸ்தானின் முகவர் என சாம்னாவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. சிவசேனாவின் கருத் துரிமையை நான் மதிக்கிறேன். அதுபோல மற்றவர்களின் கருத்துரிமைக்கும் அவர்கள் மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in