

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட் டுள்ள உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று தண்டனை விவரத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, குர்காவ்னில் தனியார் நிறு வனத்தில் நிதிப்பிரிவில் பணி யாற்றும் 25 வயது பெண், பணி முடிந்து உபேர் கால் டாக்ஸியில் வீடு திரும்பும்போது அந்த கால் டாக்ஸியின் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான புகாரில் அந்தக் காரின் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் (32) கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கு, டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, ஓட்டுநர் மீதான அனைத் துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட் டுள்ளது என தெரிவித்து அவரை குற்றவாளி என அறிவித்தார்.
தண்டனை தொடர்பான விவாதம் இன்று முடிந்த பின் தண்டனையை நீதிபதி இன்றே அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.
அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அதுல் வஸ்தவா, “குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க வலியுறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
ஷிவ்குமார் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.கே.மிஸ்ரா கூறும்போது, “தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என்றார்.