Published : 20 Jan 2021 08:33 AM
Last Updated : 20 Jan 2021 08:33 AM

கிராமப்புற பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்; 6 லட்சம் பயனாளிகளுக்கு நிதியுதவி: பிரதமர் மோடி வழங்குகிறார்

புதுடெல்லி

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி,இன்று காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் விடுவிக்க உள்ளார்.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கிராமப்புறங்களுக்கான, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவிக்க உள்ள நிதியுதவியில் அடங்கும்.

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்

“2022-க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி” ஏற்படுத்தித் தரப்படும் என பிரதமர் அறிவித்ததற்கிணங்க, கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், என்ற பெயரிலான முன்னோடித் திட்டம், 20 நவம்பர், 2016 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.26 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும், 100% நிதியுதவியாக, தலா ரூ.1.20 லட்சம் (சமவெளிப் பகுதிகளில்) மற்றும் ரூ.1.30 லட்சம் (மலைப்பிரதேச மாநிலங்கள்/ வடகிழக்கு மாநிலங்கள்/ இடர்ப்பாடு மிகுந்த பகுதிகள்/ ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள்/ ஐஏபி/ இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு) வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு, யூனிட் நிதியுதவி தவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம், திறன் பயிற்சிபெறாத தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் வழங்கப்படுவதோடு, கிராமப்புறங்களுக்கான தூய்மை இந்தியா இயக்கம் அல்லது வேறு பிற பிரத்யேக நிதியுதவித் திட்டத்தின் கீழ், நவீன கழிப்பறைகள் கட்டுவதற்காகவும் ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில/யூனியன்பிரதேச அரசுகளின் பிற திட்டங்களுடன் இணைத்து, பிரதமரின் உஜ்வலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் செய்து தரப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x