

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ கம் மற்றும் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்துகள் பயன்பாட் டுக்கு வந்துள்ளன. இந்த மருந்துகளை தங்களுக்கும் வழங்குமாறு பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவ காரம் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அமைச்சகங்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை, வெளியுறவுத் துறை, வர்த்தகத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது, கரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், கரோனா தடுப்பு மருந்துகளை கோரும் நாடுகளில் பக்கத்து நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.