Published : 19 Jan 2021 09:06 AM
Last Updated : 19 Jan 2021 09:06 AM

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி; பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கை 3.8 லட்சத்தை தாண்டியது

கரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் பெற்றுக்கொண்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 3.8 லட்சத்தை தாண்டியது

நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் மூன்றாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 7,704 அமர்வுகளில் 3,81,305 பயனாளிகளுக்கு இது வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கிறதென்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் 580 நபர்களுக்கு சிறிய அளவிலான உபாதைகள் இது வரை ஏற்பட்டுள்ளன. இவர்களில் ஏழு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நபர்களில் இரண்டு பேர் வீடு திரும்பியுள்ளனர், ஒருவர் கண்காணிப்பில் உள்ளார்.

உத்தரகாண்டில் உபாதைக்கு உள்ளானவரின் உடல்நிலை சீராக உள்ளது. சத்தீஸ்கரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கர்நாடகாவில் இருவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இது வரை இறந்துள்ள இரண்டு நபர்களில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் இதய நோய் காரணமாக உயிரிழந்தார் எனவும், அவரது மரணத்துக்கு தடுப்பு மருந்து காரணம் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்தவரின் உடற்கூறு ஆய்வு இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x